வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி வங்கியில் இன்று டாலரின் மதிப்பு 2 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.67/29.68 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 2 பைசா குறைவு. நேற்றைய இறுதி மதிப்பு 1 டாலர் ரூ.39.69/70 .
வர்த்தகம் துவங்கிய போது 1 டாலர் ரூ,39.65 முதல் ரூ.39.67 வரை விற்பனையானது.
பங்குச் சந்தையில் நிலவும் சூழ்நிலை, அத்துடன் ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்வதால் மதிப்பு குறைகின்றது.
டாலரின் மதிப்பு மேலும் குறைந்து, இறுதியில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.65 ஆக இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.