Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பால் கொள்முதல் விலையை உயர்த்து : பால் உற்பத்தியாளர்கள்!

பால் கொள்முதல் விலையை உயர்த்து : பால் உற்பத்தியாளர்கள்!
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:19 IST)
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்த்தியாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிராமப்புறங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, ஆவின் நிறுவனமும், மற்ற தனியார் நிறுவனங்களும் பால் கொள்முதல் செய்கின்றன. இதை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றன. அத்துடன் நெய்,பால் பவுடர்,பால்கோவா போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றன.

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் நல சங்கமும், தமிழ்நாடு பால் தொடக்கநிலை கூட்டுறவு ஊழியர் சங்கமும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

இவைகளின் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதற்கு பின்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் மற்றும் தமிழ்நாடு பால் தொடக்க நிலை கூட்டுறவு ஊழியர் சங்க செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன், துணை செயலாளர் என்,கணேஷன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

பால் உற்பத்தியாளர்களுக்கு தேவைப்படும் பல இடு பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. குறிப்பாக மாட்டு தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பசும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5, எருமை பால் விலையை லிட்டருக்கு ரூ.பத்து அதிகரிக்க வேண்டும். அரசு விலையை உ.யர்த்தாவிட்டால் தொடக்க நிலை பால் கூட்டுறவு சங்கங்கள், பால் கொள்முதலை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை.

முதல்வர் கருணாநிதி பால் உற்பத்தியாலர் கூட்டுறவு சங்கத்தில் பணியுரியும் 24 ஆயிரம் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தை அமல்படுத்தியதற்கு பிறகே, இந்த கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும்.

பாலின் தரத்தை பரிசோதிக்க மற்ற மாநிலங்களில் இந்திய தர நிர்ணய (ஐ.எஸ்.ஐ) முறை பின் பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் பாலின் தரத்தை நிர்ணயிக்க ரிச்மென்ட் முறை பின்பற்றப்படுகிறது. இதை மாற்றி ஐ.எஸ்.ஐ தர நிர்ணய முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

பால் கொள்முதல் விலையை அதிகரிக்காவிட்டால் வருகின்ற 19 ந் தேதியில் இருந்து தொடக்க நிலை பால் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் செய்வதில்லை என்று அறிவித்துள்ளன. தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டுவர மாநிலம் முழுவதும் பசு மற்றும் எருமை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil