வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தது!
காலையில் அந்நியச் செலாவணி சந்தை துவங்கிய போது, 1 டாலரின் மதிப்பு ரூ.39.55/39.56 ஆக இருந்தது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.53/39.54). வர்த்தகம் துவங்கிய பிறகு காலை 10.20 மணியளவில் டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தது.
பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்ததால், டாலரின் வரத்து அதிகமாகும் என்று கருதி, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஆனால் ரிசர்வ் வங்கி தலையீட்டு டாலரின் மதிப்பு குறையாமல் தடுக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.