Publish Date: Thu, 07 Feb 2008 (15:38 IST)
Updated Date: Thu, 07 Feb 2008 (15:38 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.50/39.52 ஆக இருந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.51/39.52.
வர்த்தகம் நடந்த நேரத்தில் 1 டாலர் ரூ.39.46 முதல் ரூ.39.52 வரை விற்பனையானது. இன்று சந்தையில் அதிக அளவு டாலரை வாங்க யாரும் முயற்சி செய்யவில்லை.
இதே மாதிரி விற்பனையும் குறைந்த அளவாகவே இருந்தது. பங்குச் சந்தையின் போக்கிற்கு ஏற்றார் வோல் டாலரின் மதிப்பில் மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.