Publish Date: Wed, 06 Feb 2008 (19:09 IST)
Updated Date: Wed, 06 Feb 2008 (18:46 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.61/39.62 என்ற அளவில் விற்பனையானது. நேற்றைய இறுதி விலை 39.55/39.56.
பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்தன. அத்துடன் மற்ற நாடுகளின் பஙகுச் சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. இதனால் ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர். இதுவே இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.