Publish Date: Tue, 05 Feb 2008 (15:31 IST)
Updated Date: Tue, 05 Feb 2008 (13:47 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்தது.
காலையில் அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பிக்கும் போது டாலரின் மதிப்பு அதிகரித்தது. பங்குச் சந்தையில் அந்நியச் முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ததால், டாலரின் தேவை அதிகம் இருக்கும் என்ற காரணத்தினால் டாலரின் மதிப்பு அதிகரித்தது. ஆனால் பங்குச் சந்தையில் நிலைமை மாறியவுடன் டாலரின் மதிப்பு குறைந்தது.
இன்று 1 டாலர் ரூ. 39.42 முதல் ரூ.39.48 வரை விற்பனையானது. நேற்றைய இறுதி விலை ரூ.39.48.
Webdunia
Publish Date: Tue, 05 Feb 2008 (15:31 IST)
Updated Date: Tue, 05 Feb 2008 (13:47 IST)