Publish Date: Fri, 01 Feb 2008 (13:58 IST)
Updated Date: Fri, 01 Feb 2008 (13:58 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று அதிக மாற்றம் இல்லை. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.39.36/39.37 ஆக இருந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.37/39.38.
வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 1 டாலர் ரூ.39.33 பைசா முதல் 39.34 பைசா என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. டாலரின் மதிப்பு அதிக அளவு குறையாமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையீடு இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்த வாரத்தில் கடந்த சில தினங்களாக டாலரின் மதிப்பு ரூ.39.34 முதல் ரூ.39.48 என்ற அளவில் இருந்தது. இன்று வர்த்தகம் முடியும் நேரத்தில் 1 டாலரின் மதிப்பு நேற்றைய நிலையிலேயே இருக்கும் என தெரிகிறது.