Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சணல் ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!

சணல் ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!
, புதன், 30 ஜனவரி 2008 (20:25 IST)
இந்தாண்டில் தோசா தேசி-5 ரக சணலுக்கான குறைபந்தபட்ச ஆதார விலை 100 கிலோவுக்கு ரூ.1,250 என நிர்ணயிக்க, மத்திய அமைச்சரவை பொருளாதார கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விலை கடந்த ஆண்டை விட ரூ.195 அதிகம். கடந்த 2007-08ம் ஆண்டில் சணலின் குறைந்தபட்ச விற்பனை விலை ரூ.1,055 ஆக இருந்தது. சந்தை நிலவரத்தை பொருத்து மற்ற ரக சணலின் விலையை நெசவுப்பொருள் அமைச்சகம் நிர்ணயிக்கும். மத்திய அதிகார முகமையாக இந்திய சணல் வாரியமே தொடர்ந்து செயல்படும். நிர்ணயிக்கப்படும் விலையில் நஷ்டம் ஏற்பட்டால், அதற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்கும்.

தரமான சணல் உற்பத்தியில் விவசாயிகள் அதிகளவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில், குறைந்தபட்ச விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil