வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது.
பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே குறியீட்டு எண்கள் குறைந்தன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளழு பங்குகளை விற்பனை செய்கின்றன.
இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து அதிக அளவு இருந்ததது. இதுவே இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைவதற்கு காரணம்.
அத்துடன் நாளை ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கால் விழுக்காடு குறைக்கும் என்று நிதிச் சந்தையில் கருத்து நிலவுகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், மற்ற ஆசிய நாட்டு சந்தைகளிலும் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. இது போன்ற காரணங்களினால் டாலரின் வரத்து அதிகமாகியது.
காலையில் அந்நியச் செலாவணி சந்தையில் 1 டாலர் ரூ.39.425/39.43 பைசா என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 6 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை இறுதி விலை 39.36/39.37.
1 டாலர் ரூ. 39.40 முதல் ரூ. 39.41 பைசா என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.