Publish Date: Thu, 17 Jan 2008 (13:22 IST)
Updated Date: Thu, 17 Jan 2008 (13:22 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா குறைந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.31/39.32 ஆக இருந்தது. பிறகு 1 டாலர் ரூ.39.34/39.25 என்ற விலையில் விற்பனையானது. நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.39.26/39.27.
பங்குச் சந்தையில் இன்று அந்நிய நேரடி முதலீடு அதிகரித்திருப்பதால், அந்நியச் செலவாணி சந்தையில் அதிகளவு டாலர் வரத்து இருந்தது. இதனால் டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் கூறினார்கள். கடந்த சில தினங்களாக அந்நியச் செலவாணி சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீடு இருந்ததால், டாலரின் மதிப்பு அதிகளவு குறையாமல் இருந்தது.