Publish Date: Mon, 14 Jan 2008 (15:54 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (15:54 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 2 பைசா குறைந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.27/ 39.29 ஆக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.39.29/39.30.
இன்று பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகம் இருக்கும் என்பதால் அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் மதிப்பு அதிக அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் கூறினார்கள். ஆனால் டாலரின் மதிப்பு அதிகளவு சரிய ரிசர்வ் வங்கி அனுமதிக்காது என்றும் கருதுகின்றனர். இதனால் இன்று அதிகளவு மாற்றம் இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.