மென்பொருள் வடிவமைப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் இலாபம் ரூ.1,231 ஆக அதிகரித்துள்ளது. இது சென்ற வருடத்தை விட 25 விழுக்காடு அதிகம்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இன்போசிஸ், இன்று அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதத்திற்கு இலாப கணக்கை, மும்பை பங்குச் சந்தையிடம் அறிவித்தது.
இதன் படி இன்போசிஸ் குழுமத்தின், மூன்றாவது காலாண்டில் ஒட்டு மொத்த நிகர இலாபமாக ரூ.1,231 பெற்றுள்ளது. இது சென்ற ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 25.22 விழுக்காடு அதிகம். சென்ற ஆண்டு ரூ.983 கோடி நிகர லாபமாக பெற்று இருந்தது.
இதன் வருவாய் 4,429 கோடியாக உய்ர்நதுள்ளது. இது சென்ற ஆண்டை விட 19.25 விழுக்காடு அதிகம் (சென்ற ஆண்டு 3,714 கோடி). இந்த லாபத்தை கணக்கிட்டால் இன்போசிசின் ரூ.5 முகமதிப்புள்ள ஒரு பங்கின் வருவாய் ரூ.81.07 பைசா. இது சென்ற வருடத்தை விட 17.12 விழுக்காடு அதிகம்.