வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று மாலை இறுதி நிலவரப்படி இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா குறைந்தது.
இன்று 1 டாலர் மதிப்பு ரூ.39.31 ஆக முடிந்தது (வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.34/35).
இன்று அந்நிய நாட்டு வங்கிகள் அதிகளவு டாலர்களை விற்பனை செய்தன. இதனால் டாலரின் மதிப்பு ரூ.39.21 பைசா வரை குறைந்தது. இதற்கு முன்பு நவம்பரில் டாலரின் விலை ரூ.39.16 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று 1 டாலர் ரூ.39.21 முதல் ரூ.39.34 என்ற விலையில் விற்பனையானது.
ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு ரூ.39.28 என நிர்ணயித்தது. இது வெள்ளிக் கிழமை நிர்ணயித்த மதிப்பை விட 4 பைசா குறைவு.
அந்நிய செலவாணி சந்தையில் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான மதிப்பு:
1 யூரோ ரூ.57.75 (வெள்ளிக் கிழமை 57.85/86)
1 பவுன்ட் ரூ.77.52 (77.69/70)
100 யென் ரூ.35.93/94.