வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடியும் போது இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 6 பைசா குறைந்தது (நேற்றைய இறுதி விலை 39.40/41).
இன்று வர்த்தகம் நடைபெற்ற போது 1 டாலர் ரூ.39.29 முதல் ரூ.39.37 பைசா வரை விற்பனையானது. ஒரு நிலையில் இது வரை இல்லாத அளவாக டாலரின் மதிப்பு ரூ.39.16 ஆக குறைந்தது.
இன்று அந்நிய வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தன. ரிசர்வ் வங்கி தலையிட்டு அதிக அளவு டாலரின் மதிப்பு சரியாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.32 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்த விலையை விட 14 பைசா அதிகம். நேற்று 1 டாலர் மதிப்பு ரூ.39.45 என நிர்ணயித்தது.
மற்ற நாணயங்களின் விபரம்:
1 யூரோ ரூ.57.85/86 (நேற்று 58.15/16)
1 பவுண்ட் ரூ.77.69/70 (77.84/85)
100 யென் ரூ.35.93/94 (36.33/34).