வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.44 முதல் ரூ.39.45 பைசா வரை விற்பனையானது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.41/42 )
இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பாக வங்கிகள் டாலரை வாங்கின. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 1 பீப்பாய் 97 டாலராக அதிகரித்தது.
இன்று பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு குறைவாகவே இருந்தது. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் அதிக அளவு நடைபெறவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.