லோட்டஸ் இந்தியா பரஸ்பர நிதி நிறுவனம் லோட்டஸ் இந்தியா குவாட்டர்லி இன்டர்வெல் ஃபண்ட்-பிளான் டி என்ற பெயிரல் புதிய பரஸ்பர யூனிட்டுகளை வெளியிடுகிறது.
இதில் திரட்டப்படும் நிதி கடன் பத்திரங்கள், மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இந்த திட்டத்தின் இலாப ஈவுத்தொகை மறுமுதலீடு செய்தல், பகிர்ந்தளித்தல் என்ற இரண்டு முறைகளிலும் முதலீடு செய்யலாம். ஒரு யூனிட்டின் விலை ரூ.10. குறைந்தபட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும்.
இதற்கு முதலீடு கட்டணம் இல்லை. ஆனால் யூனிட்டுகளை ஒதுக்கிய நாளில் இருந்து 90 நாட்களுக்கு முன், யூனிட்டுகளை விற்பனை செய்தால் முதலீடு செய்த தொகையில் 1 விழுக்காடு கட்டணமாக பிடித்தம் செய்து கொள்ளப்படும்.