வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிதரான டாலரின் மதிப்பு 2 பைசா அதிகரித்தது. இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.39.36/39.37 ஆக இருந்தது (வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.34/39.35).
அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்து. இன்று 1 டாலர் ரூ.39.33 முதல் ரூ.39.37 வரை வர்த்தகம் நடந்ததாக அந்நியச் செலாவணி சந்தையின் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விலை விபரம்:
1 டாலர் ரூ.39.35
1 யூரோ ரூ.57.62
1 பவுன்ட் ரூ.80.36
100 யென் ரூ.35.00