Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 13 March 2025
webdunia

ஐவரி கோஸ்ட்டில் இரும்பு தாது சுரங்கம் : டாடா கூட்டு!

Advertiesment
ஐவரி கோஸ்ட்டில் இரும்பு தாது சுரங்கம் : டாடா கூட்டு!
, வியாழன், 13 டிசம்பர் 2007 (16:26 IST)
இந்தியாவின் முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் மேற்கு ஆப்பிரிக்காவில் இரும்பு தாது வெட்டி எடுக்கும் சுரங்கத்தை அமைக்கிறது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு தொழிற்சாலை இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டன், நெதர்லாந்து நாடுகளிலும் அமைந்துள்ளன.

உருக்கு தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருளான இரும்பு தாதுவை சுரங்கம் அமைக்கும் முயற்சியில் டாடா ஸ்டீல் ஈடுபட உள்ளது. இதற்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் இரும்பு தாது வெட்டி எடுக்கும் சுரங்கத்தை கூட்டு முயற்சியில் அமைக்கிறது. இதற்காக ஐவரி நாட்டு அரசுக்கு சொந்தமான சுடோமி (SODEMI) என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்கிறது.

இந்த கூட்டணியை பற்றி ஐவரி கோஸ்டின் சுறங்கம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மோன்னட் எமானுவேல் லியான் கூறியதாவது:

இந்த மிகப் பெரிய இரும்பு தாது சுரங்க திட்டத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் கூட்டாளியாக சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது நாட்டின் முன்னேறத்திற்கு மிகப் பெரிய நடவடிக்கையாகும். இந்த சுரங்க பணியால் மக்களின் வாழ்க்கை நிலை பல வழிகளில் முன்னேற்றமடையும் என்று கூறினார். இங்கு வெட்டி எடுக்கப்படும் இரும்பு தாது டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு பிரிட்டன், நெதர்லாந்தில் சொந்தமாக உள்ள உருக்காலைக்கு அனுப்பபடும்.

நிம்பா என்ற மலைப்பகுதி முழுவதும் இரும்பு தாது உள்ளது. இது லிபிரியா, குனியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய மூன்று நாடுகளில் அமைந்துள்ளது.

இது குறித்து டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.முத்துராமன் கூறிகையில், சுடோமி மற்றும் ஐவரி கோஸ்ட் அரசுடன் கூட்டு சேர்வதில் பெருமை கொள்கின்றோம். இந்த கூட்டு எதிர்காலத்தில் நன்கு பலம் பொருந்தியதாக மாறும். இதனால் சர்வதேச அளவில் அந்த நாடு சுரங்க துறையில் முக்கியமான இடத்திற்கு வரும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil