Publish Date: Thu, 13 Dec 2007 (13:29 IST)
Updated Date: Thu, 13 Dec 2007 (13:28 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா குறைந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.40/39.41).
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து டாலரின் மதிப்பில் 4 முதல் 5 பைசா வரை குறைவதும் பிறதகு அதிகரிப்பதுமாக உள்ளது.
இதற்கு காரணம் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கும் போது அந்நியச் செலவாணி சந்தையில் அதிகளவு டாலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால் இதன் மதிப்பு குறைகின்றது. இதேபோல் பங்குகளை விற்பனை செய்யும் போது டாலரின் மதிப்பு அதிகரிகின்றது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நிய செலவாணி மதிப்பு
1 டாலர் ரூ.39.36
1 யூரோ ரூ.57.79
1 பவுன்ட் ரூ.80.31
100 யென் ரூ.35.44