Newsworld News Business 0712 07 1071207039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய வியாபாரிகள் சங்கம் துவக்கம்!

Advertiesment
புதிய வியாபாரிகள் சங்கம் தமிழ்நாடு
தமிழகத்தில் வியாபாரிகள் நல சங்கம்-தமிழ்நாடு என்ற பெயரில் புதிதாக வியாபாரிகள் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவர் எஸ். ராஜி திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகத்தில் உள்ள வியாபாரிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், வியாபாரிகளை பாதிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணவும் வியாபாரிகள் நல சங்கம்-தமிழ்நாடு என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த சங்கம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கவும், அவர்களின் உரிமைகள், சலுகைகளை பெற போராடும்.

அத்துடன் வியாபாரிகள் மத்தியில் வரிகள் பற்றிய சட்டம், அவ்வப்போது மாறும் விதிமுறைகள் பற்றி எடுத்துரைப்போம்.

எங்கள் சங்கத்திற்கு மாவட்டத்திற்கு 2 ஆயிரம் வியாபாரிகளை உறுப்பினர்காளாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம். சங்கத்தின் சார்பில் பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள், வர்த்தக பொருட்காட்சி நடத்தப்படும்.சங்கத்தின் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி, முதியோருக்கு மருத்துவ உதவி செய்து கொடுக்கப்படும” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil