Publish Date: Thu, 06 Dec 2007 (15:32 IST)
Updated Date: Thu, 06 Dec 2007 (15:32 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.45/ 39.46 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.485/495).
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிக அளவு வருகின்றது,. இதைத் தொடர்ந்து அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலர் விற்பனைக்கு அதிக அளவு வருகின்றது. இதற்கு ஏற்றார் போல் டாலர் மதிப்பு குறைய வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை வாங்குவதால் அதன் மதிப்பு குறையாமல் இருக்கின்றது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலவாணி மதிப்பு :
1 டாலர் ரூ.39.45
1 பவுண்ட் ரூ.81.12
1 யூரோ ரூ.58.20
100 யென் ரூ.35.75