Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏலத்தில் பங்கேற்று முரளிதரனின் பந்து வீச்சை எதிர்கொள்ளுங்கள்-ஈபே

ஏலத்தில் பங்கேற்று முரளிதரனின் பந்து வீச்சை எதிர்கொள்ளுங்கள்-ஈபே

Webdunia

, வியாழன், 6 டிசம்பர் 2007 (13:51 IST)
2004ம் ஆண்டு தெற்காசிய சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமப்புற குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவென்று உலக சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் தனது சொந்த அறக்கட்டளையான "பவுண்டேஷன் ஆஃப் குட்நெஸ்" என்ற அமைப்பிற்கு உலகின் முன்னணி ஆன் லைன் ஏல வர்த்தகத் தளமான ஈபே மூலம் நிதி திரட்டுகிறார்.

ஈபே வர்த்தகத்தளம் இதற்கென்றே பிரத்யேகமான ஏலம் நடத்துகிறது. டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை இந்த ஏலம் நடைபெறுகிறது. இதில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் நபருக்கு டிசம்பர் மாதம் 16ம் தேதி இலங்கை காலே மைதானத்தில் முத்தையா முரளிதரன் 10 பந்துகளை வீசுவார்.

உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ஈபே பயனாளர்களும் இந்த அரிய வாய்ப்பை வெல்ல பங்கு பெறலாம். ஈபே இந்தியா இணையதளத்தில் www.ebay.in/charity -ல் லாக் ஆன் செய்யவும்.

உலகின் முன்னணி பேட்ஸ்மென்களும் திணரும் தனது பல்வேறு பந்து வீச்சு தந்திரங்களான தூஸ்ரா, ஆஃப் ஸ்பின், மற்றும் தனது சகல திறமைகளையும் உங்களிடம் பிரயோகிப்பார். டெஸ்ட் போட்டி போலவே, இலங்கை அணித் தலைவர் மஹேலா ஜெயவர்தனே முதல் ஸ்லிப்பில் நிற்பார். சங்கக்காரா விக்கெட் கீப்பராக இருப்பார்.

வெற்றி பெறும் நபருக்கு முரளிதரன் தனது சொந்த இலங்கை சீருடையையும், கையெழுத்திட்ட கிரிக்கெட் பந்தையும் வழங்குவார்.

இந்த அரிய வாய்ப்பு பற்றி முத்தையா முரளிதரன் கூறுகிறார்: தி ஃபவுண்டேஷன் ஆஃப் குட்நெஸ்" என்ற அறக்கட்டளை சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறு வாழ்விற்காக துவங்கப்பட்டது. இந்த ஆன் லைன் ஏலம் மூலம் நிறைய நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெற்றி பெறும் நபருக்கு எனது அனைத்து சிறந்த பந்துகளையும் வீசுவேன், அது போன்ற தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்".

உலக சாதனை நாயகன் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை இலங்கை காலே மைதானத்தில் எதிர் கொள்ள துடிக்கும் நபர்களே www.ebay.in/charity -ல் லாக் ஆன் செய்யவும். ஈபே பயனாளர்களே அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil