Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் விலை சரிவு!

டாலர் விலை சரிவு!

Webdunia

, திங்கள், 3 டிசம்பர் 2007 (20:14 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் விலை சரிந்தது.

இன்று காலையில் 1 டாலர் ரூ.39.62/39.63 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.

பங்குச் சந்தையில் அதிகளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ததால் டாலர்களின் வரத்து அதிகளவு இருந்தது. இதனால் இன்று 1 டாலர் ரூ.39.49 முதல் ரூ.39.65 வரை விற்பனையானது.

இறுதியில் 1 டாலர் ரூ.39.49/ ரூ.39.50 என முடிந்தது. (வெள்ளிக்கிழமை இறுதி விலை ரூ.39.61/ரூ.39.62).

மற்ற நாணயங்களின் மதிப்பு விபரம்.

1 யூரோ ரூ.57.76/57.77 (58.53)
1 பவுன்ட் ரூ.81.37/81.38 (81.98)
100 யென் ரூ.35.70/35.71 (35.83)

Share this Story:

Follow Webdunia tamil