வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தது!
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது. இன்று 1 டாலர் ரூ.39.75/39.76 ஆக முடிந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.81
காலையில் 1 டாலர் ரூ.39.70/39.72 என்ற் அளவில் வர்த்தகம் தொடங்கியது. இன்று 1 டாலர் ரூ.39.60 முதல் ரூ.39.75 வரை விற்பனை செய்யப்பட்டது.
ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.77 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்தைவிட 9 பைசா அதிகம். நேற்று 1 டாலர் ரூ.39.68 பைசா என நிர்ணயித்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் 1 யூரோ ரூ.58.60, 1 பவுண்ட் ரூ.81.99, 100 யென் ரூ.36.14 என விற்பனையானது.