Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசியான் நாடுகளுடன் வர்த்தகம்: தடைகள் நீக்கப்படும் - பிரதமர்!

ஆசியான் நாடுகளுடன் வர்த்தகம்: தடைகள் நீக்கப்படும் - பிரதமர்!
, புதன், 21 நவம்பர் 2007 (19:28 IST)
ஆசியான் நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உள்ள தடைகள் அகற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தியா- ஆசியான் அமைப்பின் ஆறாவது மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவிற்கும் ஆசியான் அமைப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் 2010 ஆண்டில் 500 கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும். இந்த பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டை சேர்ந்த வர்த்தக சமுதாயித்தினர் வேறு நாடுகளுக்கு செல்ல விசா நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்.

இரு தரப்புக்கும் இடையே வர்த்தகத்தின் அளவு 2010 ஆம் ஆண்டில் 500 கோடி டாலராக உயர வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். இதனை எட்டுவதற்கு தகுதியுள்ள வர்த்தகர்களுக்கு விண்ணப்பித்த அன்றே விசா வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் ஏற்கனவே 300 கோடி டாலரை எட்டியுள்ளது. இந்தியா தொடர்ச்சியாக வருடத்திற்கு 9 முதல் 10 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூறினார்.

இரு தரப்புக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசும் போது பிரதமர் மன்மோகன் சிங், நாம் பொதுவான அணுகுமுறையை கடைப்பிடித்து கூடிய விரைவில் உடன்படிக்கை செய்து கொள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக இந்தியா தேவையான அளவு நீக்குபோக்குடன் நடந்து கொள்வதுடன், இதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் ஏற்படும் வகையில் உங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்.

இந்தியா ஆசியான் அமைப்பு நாடுகளின் பொருளாதாரத்துடன் இணைவதற்கு தயாராக உள்ளது என்று கூறினார்.

பிரதமர் 10 மில்லியன் டாலரை இந்தியா-ஆசியான் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார். இந்த நிதி கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இரு தரப்புக்கும் இடையே மருத்துவ துறை ஒப்பதுழைப்புக்கான குழுவை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை தெரிவித்தார். இந்த குழு குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் கூட்டாக மருந்து உற்பத்தியில் ஈடுபடும். இரண்டாவது கட்டமாக இரு தரப்பு நாடுகளிலும் பராம்பரியமாக உள்ள மருத்துவ முறையை மேம்படுத்துவதற்கு கூட்டாக பணியாற்ற தேவையான வழிமுறைகளை உண்டாக்கும்.


Share this Story:

Follow Webdunia tamil