பால் பவுடர் ஏற்றுமதி செய்வதற்கு விதித்ததிருந்த தடையை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று விவசாய இணை அமைச்சர் தஸ்லிமுதீன் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது பால் பவுடர் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடை செப்டம்பர் 30 ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. பற்றாக்குறை காலத்திலும் உள்நாட்டில் போதிய அளவு பால் கிடைக்கின்றது. இதனால் பால் பவுடர் ஏற்றுமதிக்கு புதிதாக தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் தஸ்லிமுதீன் தெரிவித்தார்.