Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2011-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: அரசின் புதிய தொழில் கொள்கை கருணாநிதி வெளியிட்டார்!

2011-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: அரசின் புதிய தொழில் கொள்கை கருணாநிதி வெளியிட்டார்!

Webdunia

, செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:35 IST)
2011ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதனமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி நே‌ற்றவெ‌‌ளி‌யி‌ட்டா‌ர்.

உற்பத்தி துறையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், தமிழகத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைச் சர்வதேச சந்தையில் தரத்திலும், விலையிலும் போட்டியிடக்கூடிய அளவுக்கு மேம்படுத்தவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்; மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தொழில் துறையில் வளர்ச்சியடையவும்; மாநிலத்திலுள்ள தொழில், வர்த்தக அமைப்புகளைக் கலந்தாலோசித்து இந்த புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன்படி, "புதிய தொழில் கொள்கை-2007''-ஐ முதலமைச்சர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

புதிய தொழில் கொள்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

2011ஆம் ஆண்டிற்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தயாரிப்புத் துறையின் தற்போதைய பங்களிப்பு 21 ‌விழு‌க்காடஎன்பதை 27 ‌விழு‌க்காடாஉயர்த்தப்படும்.

முதலீட்டாளர்களைக் கவரும் முதன்மை முதலீட்டு மையமாகத் தமிழகத்தை உருவாக்குதல்; உலகளாவிய பொருள் வழங்கீட்டுத் தொடர்களுடன், உள்நாட்டுத் தொழில் பகுதிகளை ஒருங்கிணைக்க உதவுதல்.

திறன்மிக்க தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மனித வளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலகத் தரத்திற்கு மேம்படுத்துதல்.

சென்னைக்கு அப்பாலும் தொழில் பூங்காக்கள் அமைவதற்கு ஊக்கமும், உதவிகளும் அளித்தல், அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்காகத் தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்தல்.

தொழில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனியார்துறை முதலீடுகளைக் கொண்டுவர பொதுத்துறை, தனியார்துறையின் கூட்டுமுயற்சிகளை ஏற்படுத்துதல், உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஊக்குதவிகள் அளித்தல், சிப்காட் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லது தனியார் மேம்பாட்டாளர்கள் அமைக்கும் தொழில் பூங்காக்களைச் சமமாக நடத்துதல்.

முதல் கட்டமாக, சென்னை- மணலி- எண்ணூர், செங்கல்பட்டு- திருப்பெரும்புதூர்- ராணிப்பேட்டை பகுதிகள் தொழிலகச் சிறப்புப் பகுதிகளாக உருவாக்குதல். அடுத்த கட்டமாக, மதுரை தூத்துக்குடி, கோயம்பத்தூர்- சேலம் பகுதிகள் மேம்படுத்தப்படுதல்.

வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் பூங்காக்களைப் போன்று நுண்ணிய உயர்தொழில் நுட்பப் பூங்காக்கள் சிப்காட் நிறுவனத்தினால் உருவாக்கப்படுதல்.

உயிரி அறிவியல் புதுமைத்திட்ட நிதி ஒன்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தினால் ஏற்படுத்தப்படுதல்.

பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை தொழில்களுக்கு அதிகரித்து வருவதை நிறைவு செய்யும் பொருட்டும், மக்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டும் மனித ஆற்றல், தொழில் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல்.

தொழிற்பயிற்சி தரமேம்பாட்டு திட்டம் ஒன்று தொடங்கப்படும். தொழிற்சாலைகள்- கல்வி நிறுவனங்கள் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நிர்வகிக்கும் ஒரு மூல நிதியின் மூலம் தமிழ்நாடு தொழில்நுட்ப, எரிசக்தி பயன்பாட்டுத் திறன்களை உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளுதல்.

மாநிலத்தில் ஏற்கனவே அமையப் பெற்றுள்ள தொழில் பிரிவுகளின் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்குவதற்காக அவற்றைப் புதிய தொழிற் பிரிவுகளுக்கு இணையாகக் கருதுதல், தமிழ்நாட்டில் ஏற்கனவே அமையப்பெற்று 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் செயற்பட்டுவரும் தொழில் பிரிவுகள் அமைக்கின்ற விரிவாக்கத் திட்டங்களுக்குக் கூடுதல் சலுகைகள் அளித்தல்.

நேரடி வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுவதற்கும், முதலீட்டின் அளவிற்கும் உட்பட்டு, முதலீட்டுக்குப் பிந்தைய மானியமாக அளிக்கப்படுகின்ற மூலதன மானியமும், மின்சார வரி விலக்கும் அளித்தல்.

முதலீடு செய்யும் நிறுவனங்கள் சமுதாய, சமூக வளர்ச்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதை ஊக்கப்படுத்துதல். அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் முதலீட்டு நிறுவனங்களுக்குக் கூடுதல் ஊக்குதவிகள் அளித்தல்.

வித்தியாசமான திறமைகள் கொண்டவர்களைப் பணிகளில் அமர்த்தும் தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளித்தல்.

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க உதவும் வகையில் ஒரு புதிய உயிரி அறிவியியல் கொள்கை, ஜவுளி தொழிற்சாலைகளுக்கான ஒருங்கிணைந்த கொள்கை, மது தயாரிப்புக் கொள்கை ஆகியவை அறிவித்தல்.

ஓரளவு செயல்திறம் உடையவர்களுக்கும், செயல்திறம் இல்லாதவர்களுக்கும் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்குத் தேவையான மதிப்புக் கூட்டு நடவடிக்கைகளுக்காக வேளாண் பொருளாதார மண்டலங்கள் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் பதப்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.

உற்பத்தித் தொழில்களுக்குத் தொழில் கொள்கையின்கீழ் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வேளாண் தொழில்கள், வேளாண் இயந்திரங்கள், நுண்ணிய பாசனத்திற்கான வேளாண் சாதனங்கள் தயாரிப்புத் தொழில்களுக்கும் விரிவுபடுத்துதல்.

தொழிற்சாலை அமைப்புகளுடன் கூட்டு முயற்சி வாயிலாக பன்னாட்டுக் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையங்களை அமைத்தல்.

அமைப்பு முறையிலான தொகுப்புச் சலுகைகளைப் புதிய மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கும் வழங்குதல்.

சுய சான்றளிப்பு மற்றும் தொகுப்பு ஆண்டு விவர அறிக்கைகள் வாயிலாக விதிமுறைகளைத் தளர்த்தி எளிமைப்படுத்துதல்.

மதிப்புக் கூட்டு வரி செலுத்துதல் மற்றும் விவர அறிக்கைகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் முறையை அறிமுகப்படுத்துதல்.

மின்னணு வன்பொருள், ஜவுளி, தோல், மோட்டார் வாகனம் போன்ற தொழில்களில் ஏற்றுமதி மேம்பாட்டிற்குச் சிறப்புக் கவனம் செலுத்துதல்.

ஆபத்து நிறைந்த சிவப்பு வகைத் தொழிற்சாலைகள், ஓரளவு ஆபத்து உள்ள ஆரஞ்ச் வகைத் தொழிற்சாலைகள், ஆபத்து இல்லாத பச்சை வகைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் விரைவாகவும் குறித்த காலத்திலும், சுற்றுச் சூழல் தொடர்புடைய அனுமதிகள் வழங்குதல்.

இவ்வாறு முக்கிய தொழில் கொள்கை அம்சத்தில் கூறப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil