Newsworld News Business 0710 31 1071031021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்றம்

Advertiesment
பங்குச் சந்தை ஏற்றம்

Webdunia

, புதன், 31 அக்டோபர் 2007 (12:31 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே பங்குகளின் விலை ஏற்றமாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்கு விலைகள் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதிகரித்து வந்த சென்செக்ஸ், 10 மணியளவில் சிறிது சரிந்தது. பிறகு தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.

காலை 12 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 19,905 புள்ளிகளாக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 122 புள்ளிகள் அதிகம். ( நேற்றைய இறுதி நிலவரம் 19783.51 புள்ளிகள் )

இதே போல் மிட் கேப், சுமால் கேப், பி.எஸ்.இ 100, 200, 500 ஆகிய பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் அதிகரித்த பங்குகளின் விலை, 10 மணியளவில் சரிந்தது. பிறகு தொடர்ச்சியாக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 12 மணியளவில்
5927.60 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 58.85 புள்ளிகள் அதிகரித்தது. ( நேற்றைய இறுதி நிலவரம் 5868.75 புள்ளிகள் )

இன்று இன்போசியஸ், எல். அண்ட் டி, சத்யம், டி.சி.எஸ், விப்ரோ,
ஏ.சி.எல், பி.ஹெச்.இ.எல், டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எப்.சி வங்கி, சத்யம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

கிரேசம், ஹூன்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, மாருதி, மகேந்திரா அண்ட மகேந்திரா, ரான்பாக்ஸி, ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி, என்.டி.பி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பர்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப நிறுவன பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்திருந்தது.

மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்திருந்தன.

Share this Story:

Follow Webdunia tamil