Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கயிறு தொழில் முகவரி கையேடு!

கயிறு தொழில் முகவரி கையேடு!

Webdunia

, வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:50 IST)
தேங்காய் நார் கொண்டு தயாரிக்கப்படும் காயர் என அழைக்கப்படும் கயிறு தொழில் முகவரி கையேடு வெளியிடப்பட உள்ளது.

கொச்சியில் சர்வதேச கயிறு வர்த்தக கண்காட்சி டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வர்த்தக கண்காட்சியில் அந்நிய நாடுகளைச் சேர்ந்த 127 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். அத்துடன் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வர்த்தக கண்காட்சியில் தேங்காய் நாரை கயிறாக திரித்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் பல வகையான மிதியடிகள், தரை விரிப்புக்கள் அலங்கார கைவினை பொருட்கள் அத்துடன் தேங்காய் நாரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மெத்தைகள் உட்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் இடம் பெறும்.

இந்த வர்த்தக கண்காட்சியில் இந்த வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் அந்நிய நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

இந்தியாவில் இருந்து சென்ற நிதி ஆண்டில் (2006 - 07) ரூ.605 கோடி மதிப்புள்ள கயிறு தேங்காய் நாரினால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை 2009 ஆம் ஆண்டை வலுவான நார் ஆண்டு என அறிவித்துள்ளது. இதையொட்டி இயற்கையாக கிடைக்கும் தேங்காய் நார் போன்றவைகளை மூலப் பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களுக்களை அதிகளவு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இதனால் டிசம்பர் மாதம் நடைபெறும் வர்த்தக கண்காட்சி பயனுள்ள வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

இதில் கயிறு வாரியத்தால் வெளியிடப்படும் கையேட்டில் கயிறு மற்றம் தேங்காய் நார் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றின் முகவரி தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல் இணைய தள முகவரி ஆகியவை அடங்கி இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil