Newsworld News Business 0710 15 1071015045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்போனில் பேச நிமிடத்திற்கு 5 பைசா!

Advertiesment
பாரதி ஏர்டெல் செல்போன்

Webdunia

, திங்கள், 15 அக்டோபர் 2007 (17:45 IST)
பாரதி ஏர்டெல் நிறுவனம் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகைகள் சென்னை, தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் ஏற்கனவே உள்ள ஃப்ரிபெய்டு சந்தாதாரர்களுக்கும், புதிய ஃப்ரிபெய்டு சந்தாதாராகளுக்கும் பொருந்தும்.

ரூ.599 மதிப்பில் ரீசார்ஜ் கூப்பன் அறிமுகப்படுதியுள்ளது, இதில் ரூ.533 வரை பேசலாம். (சேவை வரி கழித்தால் கிடைக்கும் முழுத் தொகைக்கும் பேசலாம்).

ூ.97 விலையுள்ள பூஸ்டர் பேக் புதிய சலுகைகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. பூஸ்டர் பேக் உள்ளவர்கள் பகல் நேரத்தில் வேறு ஏர்டெல் போனுக்கு பேச நிமிடத்திற்கு 10 பைசா, இரவு நேரத்தில் நிமிடத்திற்கு 5 பைசா மட்டுமே வசூலிக்கப்படும்.

புதிய ப்ரீ பெய்டு இணைப்பு பெறுபவர்கள் ரூ.49 ஆரம்பகட்ட கட்டணத்துடன், ூ.200 செலுத்தி ரீசார்ஜ் செய்து கொண்டால் கூடுதலாக ரூ.50 க்கு பேசலாம். இதன் மூலம் புதிய ப்ரீ பெய்டு சந்தாதாரர்கள் செலுத்தும் ரூ.49 திரும்பி வழங்கப்படுகிறது என்று ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil