Newsworld News Business 0710 12 1071012054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை : 395 புள்ளிகள் சரிவு!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை

Webdunia

, வெள்ளி, 12 அக்டோபர் 2007 (20:21 IST)
மும்பை பங்குச் சந்தையில் கடந்த மூன்று நாட்களாக பங்குகளின் விலை அதிகரித்து வந்தது. ஆனால் இன்று பங்குகளின் விலை குறைந்தது!

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்தது. இறுதி குறியீட்டு எண் 18,419.04. நேற்றைய இறுதி குறியீட்டு எண் 18,814.07.

காலையில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 19 புள்ளிகள் குறைவாகவே தொடங்கியது. மதியம் 12 மணிவரை பங்குகளின் விலை இறக்கமாக இருந்தது. பிறகு சிறிது பங்குகளின் விலை அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் 18,845 என்ற நிலையி்ல இருந்தது. பிறகு மீண்டும் விலை குறைந்தது.

கடந்த மூன்று நாளில் 1,323 புள்ளிகள் அதிகரித்தது. இன்று குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டியும் 96.60 புள்ளிகள் குறைந்தது. இன்றைய இறுதி நிப்டி எண் 5,428.25. நேற்றைய இறுதி நிலவரம் 5,524.85 புள்ளிகள்.

இன்று காலையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்குகளின் விலை அதிகரித்தது. மதியத்திற்கு பிறகு இதன் விலை குறைந்தது. இதே போல் சென்செக்ஸ் கணிப்பில் உள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் குறைந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.9,320 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று ரூ.10,603.46 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

மற்ற பிரிவுகளான மிட்கேப், சுமால் கேப் பிரிவுகளில் உள்ள நிறுவன பங்குகளின் விலைகளும் குறைந்தன.

உலோகம் சம்பந்தமான நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. இயந்திரங்கள், வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், சுல்ஜான் எனர்ஜி ஆகியவற்றின் பங்கு விலை குறைந்தது.
ி.எல்.எப்., இந்தியா புல்ஸ், யுனிடெக் பங்குகளின் விலையும் குறைந்தது.

ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி, ஸ்டேட் வங்கி, ஹெச்.ி.எப்.சி வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஜூகி ஆகியவற்றின் பங்கு விலையும் குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil