ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் டெல்லியின் புறநகர்பகுதியான குர்கானில் நவீன ஆயத்த ஆடை விற்பனை மையத்தை ரிலையன்ஸ் டிரன்ட் என்ற பெயரில் திறந்துள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சில்லரை விற்பனை கடைகளை திறக்க நாடு முழுவதும் ரூ.25,000 முதலீடு செய்ய உள்ளது.
இதற்கு குர்கானில் ஏற்கனவே அம்பி மால் என்ற பெயரில் பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட் உளளது. தற்போது இதில் 30 ஆயிரம் சதுர அடியில் நவீன ஆயத்த ஆடை விற்பனை மையத்தை திறந்துள்ளது. இதில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நிறுவனங்களின் பல்வேறு வகை ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படு்ம்.
இந்த விற்பனை மையத்தை பற்றி ரிலையன்ஸ் ஆயத்த ஆடைகள் பிரிவின் தலைமை செயல் அதிகாரி அருன் தேஷ்முக் கூறுகையில்,
இதில் ஃபர்ஸ்ட் கிளாஸ் என்ற என்ற வர்த்தக பெயரில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படும். அத்துடன் பழுப்பு அடையாமல் எப்போதும் வெண்மையாக இருக்கும் சட்டைகள், கசங்காத டிரவுசர், ஆடைகள், குழந்தைகளுக்கு நறுமணம் கமழும் ஆடைகள் மற்றம் விரைவாக உளரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அணையும் ஆடைகள் உட்பட பல்வேறு ரக ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறகையில், இந்த விற்பனை மையங்களில் லீ, விராங்க்ளர், பீட்டர் இங்கிலாந்து, ஜான் ஃப்ளேயர், பிளாக் பெர்ரி, கினி இன் ஜானி, லிலிபுட், இன்டிகோ நேசன், பிபா ஆகிய நிறுவனங்களின் ஆயத்த ஆடைகளும் விற்பனை செய்யப்படும்.
இந்தியாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மற்ற நாட்டு ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படும். இந்த வடிவமைப்பு மையம் பெங்களூரில் அமைக்கப்படும். அமெரிக்கன் அசோசிசேசன் ஆப் டெக்ஸ்டைல்ஸ், கெமிஸ்ட் அண்ட் கலரிஸ்ட், அமெரிக்க தர நிர்ணயம், இந்திய தர நிர்ணயம் மற்றும் பிர்ட்டிஷ் தர நிர்ணயம் ஆகியவைகளின் தரத்திற்கு ஏற்ப ஆடைகள் தயாரிக்கப்படும் என்று கூறினார்.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிசின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் நாடு முழுவதும் இதே மாதிரி 100 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே அகமதாபாத்தில் ரிலையன்ஸ் மார்ட் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும், பல் வேறு மாநிலங்களில் ரிலையன்ஸ் ஃப்ரஸ் என்ற பெயரில் பழம் மற்றும் காய்கறி சில்லரை விற்பனை மையங்களையும், காஜியாபாத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற பெயரில் மினனணு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.