Publish Date: Fri, 12 Oct 2007 (14:19 IST)
Updated Date: Fri, 12 Oct 2007 (14:18 IST)
பங்குச் சந்தையில் இன்று பங்குகளின் விலை ஏறற இறக்கமாக உள்ளது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தையில் 156.42 புள்ளிகள் குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 50 புள்ளிகள் குறைந்தது.
12 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 18,617.62 புள்ளிகளாக உள்ளது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 197.05 புள்ளி குறைவு. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5,464 புள்ளிகளாக உள்ளது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 60 புள்ளிகள் குறைவு.
இன்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் பங்குநர் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்றது. இதில் போனஸ் பங்குகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில், இதன் பங்குவிலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்றும் இதன் விலை உயர்ந்தது. ரிலையன்ஸ் பங்குகள் விலை ரூ. 2,691 இல் இருந்து ரூ.2,700 ஆக அதிகரித்தது.
ஒ.என்.ஜி.சி, ஹின்டால்கோ இன்டஸ்டிரிஸ், டாடா ஸ்டீல், மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகியவற்றின் பங்கு விலை அதிகரித்தது.
தகவல் தொழில்நுட்ப பங்குகள் விலை குறைந்தது. இன்போசியஸ், விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டி.சி.எஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலை குறைந்தது.
இதே போல் பர்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி ஆகியவற்றின் பங்குதளின் விலையும் குறைந்தது.
இந்திய பங்குச் சந்தை போலவே ஆசிய பங்குச் சந்தைகளிலும், பங்குகளின் விலை குறைந்தது.
ஹாங்காங் பங்குச் சந்தையின் விலைக் குறியீட்டு எண் 1.82 விழுக்காடடும், சிங்கப்பூர் ஸ்டெர்ட் டைம்ஸ் 1.11 விழுக்காடும், ஜப்பான் நிக்கி 0.77 விழுக்காடும், தென்கொரியாவின் சியோல் 1.62 விழுக்காடும் தைவான் பங்குச் சந்தை விலைப்புள்ளி 1.56 விழுக்காடும் குறைந்தது என்று புரோக்கர்கள் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Fri, 12 Oct 2007 (14:19 IST)
Updated Date: Fri, 12 Oct 2007 (14:18 IST)