Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பூரில் பின்னலாடை வர்த்தக கண்காட்சி

Advertiesment
திருப்பூரில் பின்னலாடை வர்த்தக கண்காட்சி

Webdunia

, செவ்வாய், 9 அக்டோபர் 2007 (11:29 IST)
திருப்பூரில் அகில இந்திய பின்னலாடை கண்காட்சி அக்டோபர் 17 முதல் 19 ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு குழுவுடன் இணைந்து நடத்துகிறது.

திருப்பூரில் நடக்கும் பின்னலாடை கண்காட்சி, சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இதில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களின் பல்வேறு விதமான தயாரிப்புகள் கண்காட்சிக்கு வைத்திருப்பார்கள். வெளிநாட்டை சேர்ந்த இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டு, பின்னலாடைகளை பார்வையிட்டு இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை செய்து கொள்வார்கள்.

இந்த கண்காட்சியில் குளிர்காலம், இளவேனிற்காலம், கோடை காலம் ஆகிய பருவ காலங்களில் அணியும் விதவிதமான பின்னலைடைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த பின்னலாடைகள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

கண்காட்சியின் ஒரு அம்சமாக ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறும். இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்து வரும் ஆண், பெண் மாடல்கள் பின்னலாடை அணிந்து வலம் வருவார்கள்.

இந்த கண்காட்சியில் டி சர்ட்டுகள், புல்ஒவர், கார்டிகன்ஸ், ஸ்கர்ட், ஹூடட் டி சர்ட், சார்ட்ஸ், பைஜாமா, புளவுஸ், போல்ப் லைன் போல சர்ட், பாக்ஸர் சார்ட்ஸ், ஜாக்கிங் சூட்ஸ், நீச்சல் உடைகள், டிரக் சூட்ஸ், சால்வை, மற்றம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அணியும் பல விதமான உள்ளடைகளும் கண்காட்சியில் இடம் பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil