மும்பை பங்கு சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய உடனேயே குறியீட்டு எண் 128 புள்ளிகள் எகிறியது. அதற்குப்பின் இறங்கு முகமாகவே இருந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கியதும் 128 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,901.94 புள்ளிகளைத் தொட்டது. பிறகு தொடர்ச்சியாக இறங்குமுகம்தான். காலை 11.15 மணியளவில் குறியீட்டு எண் 17,564. 67 புள்ளிகளாக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண் 5,245 புள்ளிகளாக உயர்ந்தது. பிறகு படிப்படியாக குறைந்து 12.30 மணியளவில் 5,120.75 புள்ளிகளாக குறைந்தது. ( வெள்ளிக்கிழமை மாலையில் 5185.85 புள்ளிகளாக இருந்தது.)
மும்பை பங்கு சந்தையில் நடுத்தர மூதலீட்டு நிறுவனங்களின் குறியீட்டு எண் 88.35 புள்ளிகள் குறைந்தது. இது முந்தைய நாளை விட 1.18 விழுக்காடு குறைவு. சிறிய அளவிலான முதலீட்டு நிறுவனங்களின் குறியீட்டு எண் 50.20 புள்ளிகள் குறைந்தது. இது முந்தைய நாளை விட 0.55 விழுக்காடு குறைவு.
மும்பை பங்குச் சந்தை. தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டு இடங்களிலும் குறியீட்டு எண் குறைந்து வருகிறது.