Publish Date: Fri, 05 Oct 2007 (18:08 IST)
Updated Date: Fri, 05 Oct 2007 (18:08 IST)
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம், இன்று மும்பை பங்குச் சந்தையில் பங்குகளை பட்டியலிட்டது. ரூ.52 விலையில் 420 கோடியே 88 லட்சம் பங்குகளை பட்டியலிட்டது.
இந்த பங்குகளின் வர்த்தகம் தொடங்கியவுடனேயே ஒரு பங்கு ரூ.85-க்கு விற்பனையானது. இது இந்த பங்கின் விலையுடன் ஒப்பிடுகையில் 63 விழுக்காடு அதிகம்.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் உயர் அழுத்த மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பட்டியலிடப்பட்ட அடுத்த நிமிடமே 28.86 இலட்சம் பங்குகள் ரூ.100 விலையில பரிமாற்றம் நடந்தது.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் ரூ.89.80 விலையில் பட்டியலிடப்பட்டது. அடுத்த நிமிடமே 8 கோடியே 36 இலட்சம் பங்குகள் ரூ.99.90 விலையில் பரிமாற்றம் நடந்தது.