மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 69.90 புள்ளிகள் குறைந்தது.
கடந்த 11 நாட்களாக உயர்ந்து வந்த பங்கின் விலை, இன்று குறையத் தொடங்கியது. பங்குகளின் விலைகளில் அதிக மாற்றமும், ஏற்ற இறக்கமும் காணப்பட்டது. நிறுவன ரீதியாக உள்ள முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பனை செய்து லாபம் சம்பாதித்தனர்.
அமெரிக்க பங்குச் சந்தை, மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இறக்கம் காணப்பட்டதால், மும்பை பங்குச் சந்தை ஆரம்பிக்கும் போதே, விலைகள் சரியும் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியதாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 69.90 புள்ளிகள் குறைந்து, 17,777.14 புள்ளிகளாக முடிவடைந்தது.
இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 2.15 புள்ளிகள் குறைந்து 5,208.65 புள்ளிகளாக முடிவடைந்தது.