Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய சர்க்கரை சாப்பிடத் தக்கதே : பாக் உயர் நீதிமன்றம்.

இந்திய சர்க்கரை சாப்பிடத் தக்கதே : பாக் உயர் நீதிமன்றம்.

Webdunia

, வியாழன், 4 அக்டோபர் 2007 (17:41 IST)
பாகிஸ்தான் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையில் சல்பர் கலப்பு அதிகமாக உள்ளது என்ற வாதத்தை நிராகரித்த லாகூர் உயர் நீதிமன்றம் இந்திய சர்க்கரை மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியானதே என்று தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானில் கரும்பு விளைச்சல் பாதித்து, சர்க்கரை விலை அதிகரித்தது. இதனால் இந்தியாவில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து விற்பனை செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த சுவீரா டிரேடர்ஸ் என்ற நிறுவனம் சர்க்கரையை இறக்குமதி செய்தது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை, மனிதர்கள் பயன்படும் தரத்தில் இல்லை என்று பாக். கரும்பு விவசாயி லுக்மன் அகமது என்பவர் லாகூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இரண்டாவது தரப்பாக பாகிஸ்தான் சர்க்கரை ஆலைகள் சங்கமும் சேர்ந்து கொண்டது.

இந்த சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சவுத்ரி பவாத் ஹூசைன், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை, உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறி விற்பனை செய்யக் கூடாது என்று வாதிட்டார்.

சுவீரா டிரேடர்ஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேஷம் உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையை விற்பனைக்கு அனுமதிக்கும் படி உத்தரவிட வேண்டும் என்று கோரியது.

“இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை, மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியானதல்ல. சர்வதேச சர்க்கரை பரிசோதனை முறையின் படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சல்பர் 140 விழுக்காடு அதிகளவு இருக்கின்றத” என்று பாகிஸ்தான் தரக்கட்டுப்பாடு ஆணையம் கூறியது.

பாகிஸ்தான் விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகமும் சர்க்கரையை பரிசோதனை செய்தது.
இந்தப் பரிசோதனை முடிவுகளை நிராகரித்த லாகூர் உயர்நீதிமன்றம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சர்க்கரை மனிதர்களுக்கு தீங்கு செய்யாது. இதை பொது மக்களுக்கு விற்பனை செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
webdunia

இந்தப் பரிசோதனை முடிவுகளை நிராகரித்த லாகூர் உயர்நீதிமன்றம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சர்க்கரை மனிதர்களுக்கு தீங்கு செய்யாது. இதை பொது மக்களுக்கு விற்பனை செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை விற்பனை செய்ய முடியாமல், ரயில் நிலைய கிடங்குகளில் இருப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பால், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஹரியனா மாநிலங்களில் அமைந்துள்ள சர்க்கரை ஆலைகளுக்கு பாகிஸ்தானுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil