Newsworld News Business 0710 03 1071003025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை குறியீட்டு எண் 150 புள்ளி உயர்வு!

Advertiesment
பங்குச் சந்தை

Webdunia

, புதன், 3 அக்டோபர் 2007 (13:19 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே குறியீட்டு எண் 150 புள்ளிகள் அதிகரித்து 17,467.41 புள்ளிகளைத் தொட்டது. (திங்கட்கிழமை மாலை 17,328.62)

இன்று காலையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள் என்று பங்குத் தரகர்கள் தெரிவித்தனர

இதேபோல் காலையில் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகள் வாங்கும் போக்கு அதிகளவில் இருந்தது. இதன் குறியீட்டு எண் நிப்டியும் 5,226.15 அதிகரித்து, பிறகு 5066.20 குறைந்தது.
(திங்கட் கிழமை மாலை (5068)

மின் உற்பத்தி, மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தன.

டாடா பவர் கம்பெனியின் பங்கு விலை 20.112 விழுக்காடு அதிகரித்து, ூ.1,094 ஆக உயர்ந்தது.

இதே போல் என்.ி.ி.சி நிறுவனத்தின் பங்குகள் விலை 7.14 விழுக்காடு அதிகரித்து, ூ.220.70 ஆக உயர்ந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளின் விலை 6.06 விழுக்காடு அதிகரித்து ரூ.649 ஆகவும், ஒ.என்.ி.சி பங்குகளின் விலை 3.54 விழுக்காடு அதிகரித்து ரூ.1032.35 ஆகவும், இன்போசியஸ் பங்கின் விலை 2.48 விழுக்காடு அதிகரித்து ரூ.1940 ஆகவும் இருந்தது.

ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது.

அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை வகுக்கும் கூட்டம் அக்டோபர் 30, 31 ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வட்டி விகிதம் அரை விழுக்காடு குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள், இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையில் அதிகளவு முதலீடு செய்வார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி பங்கச் சந்தை குறியீட்டு எண் 13,989.11 புள்ளிகளாக இருந்தது. ஒரு மாதத்தில் 3,339.51 புள்ளிகள் அதிகரித்து (23.8 விழுக்காடு), அக்டோபர் 1 ஆம் தேதி 17,328.62 புள்ளிகளாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil