மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் எனர்ஜி உட்பட பல நிறுவனங்களின் விலை அதிகரித்த காரணத்தினால் குறியீட்டு எண் 37.52 புள்ளிகள் அதிகரித்தது. இறுதியாக 17,328.63 புள்ளிகளாக முடிவுற்றது. ஒரு நிலையில் குறியீட்டு எண் 17,452.34 புள்ளிகளைத் தொட்டது.
இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 47.60 புள்ளிகள் அதிகரித்து இறுதியில் 5068.95 புள்ளிகளில் முடிந்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி பங்கின் விலை ரூ.143.90 அதிகரித்தது, இதன் விலை ஒரு நிலையில் 1,385 ஆக அதிகரித்து, இறுதியில் ரூ.1349 ஆக முடிவுற்றது.
தேசிய அனல் மின் நிறுவன பங்குகளின் விலை 6.49 விழுக்காடு அதிகரித்து இறுதியில் ரூ 206 க்கு முடிவுற்றது.
ஒ.என்.ஜி.சியின் பங்குகளும் 4.09 விழுக்காடு அதிகரித்து, இறுதியில் ரூ.997.10 க்கு முடிவுற்றது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்கின் விலை 3.98 விழுக்காடு அதிகரித்து, இறுதியில் ரூ.608.95 ஆக முடிந்தது.
பாரத் ஸ்டேட் வங்கி பங்கின் விலை 2.93 விழுக்காடு குறைந்தது. இதன் இறுதி விலை ரூ.1.893.50. இதே போல் ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ., பி.ஹெச்.இ.எல்., ஹெச்.டி.எப்.சி வங்கி ஆகியவற்றின் விலைகள் குறைந்தன.