Newsworld News Business 0709 29 1070929057_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போட்டியை சமாளிக்க மருந்து கடைக்காரர்கள் திட்டம்!

Advertiesment
மருந்து கடைக்காரர்கள் திட்டம்

Webdunia

, சனி, 29 செப்டம்பர் 2007 (21:41 IST)
மருந்தவிற்பனையிலபெரிநிறுவனங்களினபோட்டியசமாளிக்க, அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியாக மொத்த, சில்லரை விற்பனை நிலையங்களை நாடு முழுவதும் திறக்க உள்ளது.

கோவா மாநில தலைநகர் பனாஜியில் அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்த சங்கத்தின் தலைவர் மோகன், மருந்து சில்லறை விற்பனையில், பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்கள் நுழைவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இதற்காக சங்கத்தின் சார்பில் மருந்து மொதத விற்பனையையும், எல்லா மருந்துகடைகளையும் ஒருங்கினைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பன்னாட்டு நிறுவனங்கள், உள் நாட்டு பெரிய வர்த்தக, தொழில் நிறுவனங்கள், மருந்து சில்லரை விற்பனையில் ஈடுபடம் முயற்சியை தடுக்கும் வகையில் நாங்கள் ஆரம்பத்தில் சங்கிலி தொடர் போல் மருந்து விற்பனை நிலையங்களை திறக்க போகின்றோம். இதனால் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளிக்க முடியும்.

எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஐந்தரை லட்சம் மருந்து விற்பனையாளர்கள் இணைந்து அகில இந்திய மருந்து விற்பனை நிறுவனத்தை துவக்கி உள்ளோம். இது ரூ.22 கோடி முதலீட்டில் துவக்கப்பட்டுள்ளது.

இதற்கு 22 மாநிலங்களில் துணை நிறுவனங்கள் உள்ளன. இந்த சங்கத்தின் சார்பில் எல்லோரும் இணைந்து ரூ.40,000 கோடி மதிப்பிற்கு மருந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்த நிறுவனத்தின் சார்பில் உயிர் காக்கும் மருந்துகள், குறைந்த இலாபத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு எல்லா மருந்துகளுக்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க வேண்டும். வரிகளையும் குறைக்க வேண்டும்.

இது போல் மாநில அரசுகளும் நுழைவு வரியை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால், மருந்துகளை தற்போதைய விலையை விட 30 விழுக்காடுகள் குறைவாக விற்பனை செய்ய முடியும்.

நாங்கள் நாடு முழுவதும் மொத்த, சில்லரை விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கு, எங்களுக்கு ஆலோசனை கூற எர்ணஸ்ட் அண்ட் யெங் அண்ட் அஸின்டியூர் நிறுவனத்தை நியமித்துள்ளோம். பல வங்கிகள், விற்பனை நிலையங்களை திறக்க நிதி உதவி செய்ய முன்வந்துள்ளன என்று தெரிவித்தார்.

இதன் கெளரவ செயலாளர் ஜே. எஸ். சிண்டே கூறுகையில், ஏற்கனவே எங்கள் சங்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில், மகாராஷ்டிரா மாநில மருந்து விநியோகம் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளது. இதன் அலுவலகம் மும்பையில் செம்பூர் பகுதியில் 12 ஆயிரம் சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிற்கு மருந்துகளை தயாரிக்கின்றனர். இதில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்றவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil