சென்னையில் ஸ்ரீராம் புராப்பரிட்டிஸ் நிறுவனம், தகவல் தொழி்ல் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.
இது தாம்பரம் அருகே, 40 இலட்சம் சதுர அடியில், தி கேட்வே என்ற பெயரில் அமைய உள்ளது. இதற்கு நான்கு கட்டங்களாக மொத்தம் ரூ 1,400 கோடி முதலீடு செய்யப்படும். இதில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் அமைந்திருக்கும் என்று இதன் தலைமை செயல் அலுவலர் ஆர். முருகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முதல் கட்டமாக பத்து இலட்சம் சதுர அடியில் அலுவலகங்கள் கட்டப்படும். இது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அதற்கடுத்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் அலுவலகங்கள் அமைக்கப்படும். 2009 ஆண்டிற்குள் வணிக வளாகம் முற்றிலும் கட்டி முடிக்கப்பட்டுவிடும்.
இதற்கான மூதலீட்டில் 50 விழுக்காடு ஸ்ரீராம் புராப்பர்ட்டிஸ்சும், மீதம் 50 விழுக்காடு சன் அப்போலோவும் முதலீடு செய்யும். என்று அவர் தெரிவித்தார்.