Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாவிக் துணை புரோக்கர் நிறுவனம் தற்காலிக நீக்கம்!

ஹாவிக் துணை புரோக்கர் நிறுவனம் தற்காலிக நீக்கம்!

Webdunia

, செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:41 IST)
பங்குசசந்தகட்டுப்பாட்டவாரியமாசெபி, ஹாவிக் மேனெஜ்மென்ட் சரிவீஸஸ் இந்தியா லிமிடெட் என்ற துணை புரோக்கர் நிறுவனத்தை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் சார்பில் பங்குகளை வாங்கி, விற்கும் செபியிடம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். முதன்மை புரோக்கர்கள் மட்டுமல்லாது., இவர்களிடம் துணை புரோக்கர்களாக இருக்கும் நிறுவனங்கள் கூட பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவர்கள் மீது புகார் வரும் போது, தவறு செய்யும் புரோக்கர்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கும்.

இதன்படி, மும்பை பங்குச் சந்தையில் உறுப்பினராக இருக்கும் பி.எம். காந்தி செக்யூரிட்டிஸ்சின் துணை புரோக்கராக இருக்கும் ஹாவிக் மேனெஜ்மென்ட் சர்வீஸஸ் லிமிடெட்டை இரண்டு மாத காலம், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்துள்ளது.

இந்தத் தடை நியூமிரா யூரோ ப்ராஜக்ட் லிமிடெட் நிறுவனப் பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil