Publish Date: Tue, 25 Sep 2007 (15:37 IST)
Updated Date: Tue, 25 Sep 2007 (15:36 IST)
டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த டி.வி.எஸ் எலக்ட்ரானிக்ஸ், ஆறு பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதை திரும்பப்பெறுவது என முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்புதல், சமீபத்தில் நடந்த இந்நிறுவனத்தின் பங்குநர் கூட்டத்தில் பெறப்பட்டது.
அகமதாபாத் பங்குச் சந்தை, பெங்களூர் பங்குச் சந்தை, கொச்சின் பங்குச் சந்தை, சென்னை பங்குச் சந்தை, கொல்கத்தா பங்குச் சந்தை சங்கம், டில்லி பங்குச் சந்தை சங்கம் ஆகிய ஆறு பங்குச் சந்தைகளின் பட்டியலில் இருந்து நீக்கிக் கொள்ளப்படும்.
நாடு முழுவதும் பரந்த அளவில் வர்த்தக இணைப்புகளை கொண்டுள்ள மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து பதிவை நீடிப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Tue, 25 Sep 2007 (15:37 IST)
Updated Date: Tue, 25 Sep 2007 (15:36 IST)