மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே 447.61 புள்ளிகள் அதிகரித்து குறீயீட்டு எண் 16,117 புள்ளிகளை எட்டியது!
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறீயீட்டு எண் நிப்டியும் 131.50 புள்ளிகள் அதிகரித்தது. இதன் குறீயீட்டு எண் 4,677.70 புள்ளிகளை தொட்டது.
அமெரிக்க மத்திய வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது. இதனால் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது அதிகரித்ததால், பங்குகளின் விலைகள் உயர்ந்ததாக பங்குச் சந்தை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக பங்குகளை விற்கும் போக்கு அதிகரித்ததால், விலைகள் குறைந்து குறீயீட்டு எண் சரிந்தது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறைந்திருப்பதால், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்குவது அதிகரிக்கும். இதனால் இந்திய நிதி சந்தையில் நெருக்கடி ஏற்படுவது தவிர்க்கப்படும் என பங்குச் சந்தை வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய இறுதி குறியீட்டு எண் 15669.12
தேசிய பங்குச் சந்தையின் நேற்றைய இறுதி குறீயீட்டு எண் 4546.20