Publish Date: Tue, 21 Aug 2007 (16:09 IST)
Updated Date: Tue, 21 Aug 2007 (16:08 IST)
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக உருவாகியுள்ள அரசியல் சிக்கல் பங்குச் சந்தையிலும் எதிரொலித்ததன் விளைவாக மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று பிற்பகல் வரையிலான வர்த்தகத்தில் 434 புள்ளிகள் குறைந்தது!
2 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 13,993 புள்ளிகளுக்குச் சரிந்துள்ளது. தேச பங்குச் சந்தைக் குறியீடு 132 புள்ளிகள் குறைந்து 4,077 புள்ளிகளுக்குச் சரிந்துள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுத்தாலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இடதுசாரிகள் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து ஆட்சிக்கு சிக்கல் உருவாகலாம். அதன் காரணமாக பங்குச் சந்தை வணிகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பங்குகளை விற்கத் துவங்கியதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதென பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்பொழுது ஓரளவிற்கு மேம்பட்டு மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 14,085 புள்ளிகளுக்கும், தேச பங்குச் சந்தைக் குறியீடு 4,101 புள்ளிகளுக்கும் உயர்ந்துள்ளது.
Webdunia
Publish Date: Tue, 21 Aug 2007 (16:09 IST)
Updated Date: Tue, 21 Aug 2007 (16:08 IST)