Publish Date: Thu, 16 Aug 2007 (11:36 IST)
Updated Date: Thu, 16 Aug 2007 (11:35 IST)
ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் நேற்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவிற்கு பங்குகளை விற்கத் துவங்கியதால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 637 புள்ளிகள் சரிந்து 14,363 புள்ளிகளாக குறைந்துள்ளது.
தேசப் பங்குச் சந்தை சற்றேறக் குறைய 200 புள்ளிகள் சரிந்து 4,173.90 புள்ளிகளாக குறைந்தது.
நிக்கி, டோஜூன்ஸ், நாஸ்டாங் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவினால் இன்று இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.
Webdunia
Publish Date: Thu, 16 Aug 2007 (11:36 IST)
Updated Date: Thu, 16 Aug 2007 (11:35 IST)