Publish Date: Mon, 13 Aug 2007 (11:25 IST)
Updated Date: Mon, 13 Aug 2007 (11:24 IST)
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீடு அதிகரித்தன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று காலை வர்த்தகத்திலேயே 150 புள்ளிகள் உயர்ந்தது!
30 முன்னணிப் பங்குகளின் அடிப்படையிலான மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 157 புள்ளிகள் உயர்ந்து 15,025 புள்ளிகளை எட்டியது.
தேச பங்குச் சந்தைக் குறியீடு 41 புள்ளிகள் அதிகரித்து 4,375 புள்ளிகளை எட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கேபிடல். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏசிசி, கிராசிம்., எல் அண்ட்டி ஐடிசி, ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி., ஸ்டேட் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் விலை கூறியுள்ளது.