உலக அளவில் கச்சா, எஃகு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது!
ஆண்டிற்கு 44 மில்லியன் டன் உற்பத்தி செய்து 7வது இடத்தில இருந்த இந்தியா, 2006-07 நிதியாண்டில் 50.71 மில்லியன் டன் கச்சா, எஃகு உற்பத்தி செய்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் இறுக்கப்பட்ட எஃகு (finished steel) உற்பத்தி 51.90 மில்லியன் டன் ஆகும்.
இரும்பு, எஃகு துறையின் கீழ் இயங்கும் ஜே.பி.சி என்றழைக்கப்படும் Joint Committee-யும், பொருளாதார ஆய்வுப் பிரிவும் இணைந்து இந்தியாவின் ஒட்டுமொத்த எஃகு உற்பத்தியை முடிவு செய்துள்ளன.