Publish Date: Thu, 02 Aug 2007 (12:10 IST)
Updated Date: Thu, 02 Aug 2007 (12:09 IST)
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நேற்று ஒரே நாளில் 615 புள்ளிகளை அடைந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றைய காலை வர்த்தகத்தில் 104 புள்ளிகள் முன்னேறியது.
நேற்றைய வணிகத்தின் முடிவில் 14,935.77 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு 87 புள்ளிகள் அதிகரித்து 15,022.87 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகத்தை துவங்கியது. சில மணி துளிகளில் 15,040 புள்ளிகளாக உயர்ந்தது.
அதிக விலை கொண்ட பங்குகள் அதிகம் விற்பனையானதன் விளைவாக இந்த உயர்வு ஏற்பட்டது. தேசப் பங்குச் சந்தை - நிப்டி 29 புள்ளிகள் அதிகரித்து 4375.15 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
(பி.டி.ஐ.)